Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் : 9 ஆஸ்பத்திரிக்கு அங்கீகாரம்

தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் : 9 ஆஸ்பத்திரிக்கு அங்கீகாரம்

தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் : 9 ஆஸ்பத்திரிக்கு அங்கீகாரம்

தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம் : 9 ஆஸ்பத்திரிக்கு அங்கீகாரம்

ADDED : செப் 01, 2011 11:53 PM


Google News

தூத்துக்குடி : தமிழக அரசின் விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆலோசனையின் பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கும் சிறப்பான தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் உயரிய சிந்தனையில் உருவாக்கப்பட்டதே விரிவாக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீடு திட்டமாகும். ஏழை எளிய மக்கள் உடனுக்குடன் பயன் பெறும் பொருட்டும், முந்தைய மருத்துவ காப்பீடு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரால் கடந்த 22ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வருமானச்சான்று கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ரேஷன்கார்டு மற்றும் முந்தைய காப்பீடு திட்ட அடையாள அட்டை இருக்க வேண்டும். காப்பீடு தொகை ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ஒரு லட்சமாகும். முந்தைய காலங்களில் இந்த திட்டத்தின் மூலமாக காப்பீடு தொகை எவ்வளவு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போதும் அவர்கள் ஒரு லட்சம் வரை பயன் அடையலாம். இருதயம் மற்றும் நெஞ்சக நோய் சிகிச்சை, தைராய்டு அறுவை சிகிச்சை, இரப்பை மற்றும் சம்பந்தமான சிகிச்சை, பித்தப்பை மற்றும் மண்ணீரல் சிகிச்சை, மகளிர் புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோயிற்கான கதிர்வீச்சு மற்றும் மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட 204 வகையான நோய்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகள் மொத்தம் 416 ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிட்டி ஆஸ்பத்திரி, புதுக்கோட்டை பாத்திமா ஆஸ்பத்திரி, ஆத்தூர் சங்கர் ஆஸ்பத்திரி, திருச்செந்தூர் பி.ஜி ஆஸ்பத்திரி கோவில்பட்டி சுபிக்ஷா பிரபு ஆஸ்பத்திரி, ஸ்ரீ முரளி ஆஸ்பத்திரி, வெங்கடேஸ்வரா ஆஸ்பத்திரி, ஸ்ரீனிவாசா ஆஸ்பத்திரி, துளசி ஆஸ்பத்திரி ஆகிய 9 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us