/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாகன நம்பர் பிளேட் முறையாக எழுத ஒரு வாரம் கெடுவாகன நம்பர் பிளேட் முறையாக எழுத ஒரு வாரம் கெடு
வாகன நம்பர் பிளேட் முறையாக எழுத ஒரு வாரம் கெடு
வாகன நம்பர் பிளேட் முறையாக எழுத ஒரு வாரம் கெடு
வாகன நம்பர் பிளேட் முறையாக எழுத ஒரு வாரம் கெடு
ADDED : செப் 03, 2011 12:45 AM
ஈரோடு: வாகன நம்பர் பிளேட்களை சரி செய்ய, ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, டூ-வீலர், கார் மற்றும் இதர வாகனங்களின் நம்பர் பிளேட்களில், பல்வேறு சித்திரங்கள் பதிக்கப்பட்ட எண்கள் எழுதுவது, நடிகர், நடிகைகள் மற்றும் கட்சி தலைவர்கள் படங்கள் வரைவது அதிகரித்துள்ளது. விபத்து மற்றும் குற்றச்சாட்டுகளில் ஈடுபடும் வாகன நம்பர்களை கண்டறிவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் பட்சத்தில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு விதிமுறைபடி நம்பர் பிளேட்களில் எண்கள் பதிக்க மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பழைய மற்றும் புதிய வாகன நம்பர் பிளேட்களில் விதிமுறை மீறி பதிக்கப்பட்ட எண்களை, ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் அவகாசம் கொடுத்துள்ளார்.


