/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு பதவி உயர்வுநெல்லையில் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு பதவி உயர்வு
நெல்லையில் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு பதவி உயர்வு
நெல்லையில் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு பதவி உயர்வு
நெல்லையில் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADDED : செப் 03, 2011 02:47 AM
திருநெல்வேலி:கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பதவி
உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக
பணிபுரிந்து வந்த சுப்பிரமணியன் மதுரை வீட்டு வசதி துணைப்பதிவாளராகவும்,
அற்புதானந்தம் தூத்துக்குடி மாவட்ட பிரகாசபுரம் கூட்டுறவு நகர பாங்க்
துணைப்பதிவாளர்/தனி அலுவலராகவும், மகராஜன் சேலம் இணைப்பதிவாளர் அலுவலக
துணைபதிவாளர்/பணியாளர் அலுவலராகவும், குமரேசன் தூத்துக்குடி மாவட்ட மத்திய
கூட்டுறவு பாங்க் துணைப்பதிவாளர்/முதன்மை வருவாய் அலுவலராகவும் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.மாவட்டத்தில் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து
வரும் ஜான் கபிரியேல், சங்கர், சக்திவேல், முருகன், அகஸ்டின் ஜான், பேபி
ரோஸ்லின், பால்மணி, சோமசுந்தரம் ஆகியோர்களுக்கு கூட்டுறவு சார்பதிவாளராக
பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும்
கூட்டுறவுத்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.


