தே.மு.தி.க., பேரணிக்கு தடை: நாகையில் பரபரப்பு
தே.மு.தி.க., பேரணிக்கு தடை: நாகையில் பரபரப்பு
தே.மு.தி.க., பேரணிக்கு தடை: நாகையில் பரபரப்பு
ADDED : செப் 03, 2011 11:07 AM
நாகை: நாகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் மாஜி மாநில மீனவரணி செயலாளர் மதியழகன் தலைமையில் இன்று பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், பேரணி நடத்த போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட தே.மு.தி.க., கட்சியினர், நாகை ரயில் நிலையம் முன்பாக குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.