/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நாளை வஉசி பிறந்தநாள் விழா : துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதிநாளை வஉசி பிறந்தநாள் விழா : துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி
நாளை வஉசி பிறந்தநாள் விழா : துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி
நாளை வஉசி பிறந்தநாள் விழா : துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி
நாளை வஉசி பிறந்தநாள் விழா : துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி
ADDED : செப் 03, 2011 11:26 PM
தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை வஉசி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கும், மாணவ,மாணவியர்களுக்கும் துறைமுகத்தை சுற்றிப்பார்க்க இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து துறைமுக சேர்மன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தூத்துக்குடி துறைமுகம் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசனால் வ.உ.சிதம்பரானர் துறைமுகம் என்று பெயர் மாற்றம் செய்த பின் வ.உ.சிதம்பரானாரின் 139வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகப்பொறுப்புக் கழகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் காலை 10 மணிமுதல் மாலை 4.30 மணிவரை துறைமுகத்தை சுற்றிப் பார்ப்பதற்கு இலவச அனுமதி வழங்குகிறது. இவ்வாறு துறைமுக சேர்மன் சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


