/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல் வேட்டை அதிகரிப்புடாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல் வேட்டை அதிகரிப்பு
டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல் வேட்டை அதிகரிப்பு
டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல் வேட்டை அதிகரிப்பு
டாஸ்மாக் மதுக்கடைகளில் வசூல் வேட்டை அதிகரிப்பு
ADDED : செப் 04, 2011 12:27 AM
ஈரோடு: அரசு டாஸ்மாக் மதுமான கடைகளில் நிர்ணயிக்கப்ட்ட விலைகாட்டிலும், முறைகேடாக விற்பனை செய்வதால், 'குடி' மகன்கள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின். ஐ.எம்.எஃப்.எல்., மற்றும் பீர் ரகங்கள், குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இதையும் விட கூடுதலாக, விலை வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. குடிமகன் ஒருவர் கூறியதாவது: மதுக் கடைகளில் முறைகேடு அதிகரித்து வருகிறது. இதுபற்றி, அதிகாரிகளிடம் புகார் செய்தால், எங்கள் வீட்டு முகவரி, வேலை செய்யும் நிறுவன முகவரி மற்றும் பல்வேறு கேள்விகளை கேட்டு, எங்களை திசை திருப்பும் வகையில், அதிகாரிகள் கேள்வி கேட்டு வதைக்கின்றனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. சில கடைகளில் புதிய விலை பட்டியல் வைக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி, மதுக்கடை ஊழிர்கள் குவாட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதல் வசூல் செய்கின்றனர். இதன் மூலம், டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளத்தை விட, அதிக லாபம் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


