ADDED : செப் 04, 2011 11:21 PM
திண்டிவனம் : திண்டிவனத்தில் வீரபிரம்மேந்திர சுவாமிகளின் குரு பூஜை விழா நடந்தது.
திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் உள்ள வீரபிரம்மேந்திர சுவாமிகள் கோவிவில் 25ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகல் ஒரு மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை திருவண்ணாமலை தண்டபாணி சர்மா செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


