/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சரக விளையாட்டு போட்டி: காளியாபுரம் பள்ளி முதலிடம்சரக விளையாட்டு போட்டி: காளியாபுரம் பள்ளி முதலிடம்
சரக விளையாட்டு போட்டி: காளியாபுரம் பள்ளி முதலிடம்
சரக விளையாட்டு போட்டி: காளியாபுரம் பள்ளி முதலிடம்
சரக விளையாட்டு போட்டி: காளியாபுரம் பள்ளி முதலிடம்
ADDED : செப் 04, 2011 11:40 PM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த காளியாபுரம் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
கோட்டூர் சரக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
கோட்டூர் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆனைமலை அரசினர்
மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிகளில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட
பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். காளியாபுரம் பழனியம்மாள்
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட அளவில்
விளையாடுவதற்கு தகுதி பெற்றனர். மாணவர்களுக்கான மிக மூத்தோர்களுக்கான
கூடைபந்து, கோ-கோ, எறிபந்து மற்றும் பூப்பந்து போட்டிகளில் முதலிடமும்,
கபடி போட்டியில் இரண்டாமிடமும், மூத்தோர்களுக்கான கால்பந்து மற்றும் கோ-கோ
போட்டியில் முதலிடமும், கூடைபந்து, கையுந்து மற்றும் பூப்பந்து போட்டியில்
இரண்டாமிடமும், மாணவிகளுக்கான மிக மூத்தோர், மூத்தோர், இளையோர்களுக்கான
கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்றுவெற்றி பெற்றுள்ளனர். தனித்திறன்
போட்டியில் மிக மூத்தோர்களுக்கான ஈட்டி எறிதல், மூன்று முறை தத்திதாவுதல்
போட்டியில் கவுதம், பிரசாந்த் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் ராஜேஷ்
மூன்றாமிடமும், மூத்தோர்களுக்கான மூன்று முறை தத்திதாவுதல் போட்டியில்
பார்த்தசாரதி முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் பூபதிராஜா
இரண்டாமிடமும், இளையோர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஸ்ரீபதி
முதலிடமும் பெற்று வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் செயலர்
சிவக்குமார், இணை செயலர் நரேந்திரகுமார், தலைமை ஆசிரியர் வீரமணி,
உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், செந்தூர்பாண்டியன் பாராட்டினர்.


