ADDED : செப் 06, 2011 01:40 AM
மதுரை : சட்டசபை தேர்தலை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக, கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பனுக்கு தேர்தல் கமிஷன் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தலின்போது இவர்களை தேர்தல் கமிஷன் நியமித்தது. நடுநிலைமையாக செயல்பட்டு, நகரில் 136 வழக்குகளும், புறநகரில் 160 வழக்குகளும் பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுத்தனர். வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ.5 கோடியை பறிமுதல் செய்து தேர்தலை வெற்றிகரமாக நடத்தி காட்டினர். இதன் காரணமாக, மாநில தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் பாராட்டையும் பெற்றனர். தற்போது, இந்த அதிகாரிகளின் தேர்தல் பணியை பாராட்டி, அவர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இவர்களுக்கு தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கியும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜூம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


