/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கள்ளக்காதலனுடன் பெண் விஷம் குடித்து தற்கொலைகள்ளக்காதலனுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதலனுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதலனுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதலனுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை
ADDED : செப் 06, 2011 01:45 AM
ஈரோடு: வெள்ளோடு அருகே கள்ளக்காதலனுடன், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, வெள்ளோடு அருகே கே.கே.வலசு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. கேபிள்
ஆப்ரேட்டராக இருந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி (25). ஐந்து வயது
மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ்கண்ணா தனது
வீட்டின் அருகில் உடற்பயிற்சி நிலையம் துவங்கினார். பல்வேறு பகுதியில்
இருந்து இளைஞர்கள் இங்குவந்தனர். பெருந்துறை தனியார் கல்லூரியில்
அட்டெண்டராக இருந்த சரவணனும் (31) இங்கு உடற்பயிற்சிக்கு வந்தார்.
சரவணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டது. இரண்டு
நாட்களுக்கு முன் இவர்களை நெருக்கமாக பார்த்த ராஜேஷ்கண்ணா கண்டித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முத்துலட்சுமியும், சரவணனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு
செய்தனர். நேற்று மதியம் குமிளிபாலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரைக்கு
சென்ற இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு, 'சல்பாஸ்' விஷ மாத்திரையை
தின்றனர். பின்னர், ராஜேஷ்கண்ணா மொபைல் ஃபோனுக்கு தொடர்பு கொண்ட
முத்துலட்சுமி, 'நாங்கள் இருவரும் விஷம் குடித்து விட்டோம்' என,
கூறியுள்ளார். ராஜேஷ்கண்ணா சம்பவ இடத்துக்கு சென்று, இருவரையும் மீட்டு,
ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி இருவரும்
பரிதாபமாக இறந்தனர். வெள்ளோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.


