அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவன் கைது
அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவன் கைது
அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவன் கைது
ADDED : செப் 06, 2011 09:41 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் சி.ஐ.ஏ.
இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவன் கைது செய்யப்பட்டான். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவனான யூனிஸ்-அல்-மொளரிதானி என்பவன் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையான தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டாவில் இவனது நடமாட்டத்தை அறிந்த பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப்படையினர், சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்புடன் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூனிஸ் -அல்- மொளரிதானி அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் ஈர்னஸ்ட் ,. வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் குவெட்டா பகுதியில் யூனிஸ் அல்- மொளரிதானியின் நடவடிக்கைகளை பல மாதங்கள் கண்காணித்து பின்னர் அவனை கைது செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.


