/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநகராட்சி நிர்வாக வசதிக்கு நான்கு மண்டலமாக பிரிப்புமாநகராட்சி நிர்வாக வசதிக்கு நான்கு மண்டலமாக பிரிப்பு
மாநகராட்சி நிர்வாக வசதிக்கு நான்கு மண்டலமாக பிரிப்பு
மாநகராட்சி நிர்வாக வசதிக்கு நான்கு மண்டலமாக பிரிப்பு
மாநகராட்சி நிர்வாக வசதிக்கு நான்கு மண்டலமாக பிரிப்பு
ADDED : செப் 07, 2011 12:45 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக நான்கு மண்டலங்களாக
பிரிக்கப்பட்டு, உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று
நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது. திருப்பூர்
மாநகராட்சி 60 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வார்டுகள்,
தற்போது, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உத்தேச பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதல் மண்டலத்துக்கு, வார்டு 1
முதல் 15, இரண்டாவது மண்டலம் 16 முதல் 30 வரை, மூன்றாவது மண்டலம் 31 முதல்
45 வரை, நான்காவது மண்டலத்துக்குள் 46 முதல் 60 வார்டுகள் அமைத்து
மண்டலங்கள் பிரிக்க உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
இன்று நடக்கும் மாநகராட்சி அவசர கூட்டத்தில் விவாதம் நடத்தப்படுகிறது.


