/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூரில் இன்று மாற்றுதிறனாளிகள் மருத்துவ முகாம்கடையநல்லூரில் இன்று மாற்றுதிறனாளிகள் மருத்துவ முகாம்
கடையநல்லூரில் இன்று மாற்றுதிறனாளிகள் மருத்துவ முகாம்
கடையநல்லூரில் இன்று மாற்றுதிறனாளிகள் மருத்துவ முகாம்
கடையநல்லூரில் இன்று மாற்றுதிறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : செப் 07, 2011 03:07 AM
தென்காசி:கடையநல்லூரில் இன்று (7ம் தேதி) மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு
மருத்துவ முகாம் நடக்கிறது.இதுகுறித்து தென்காசி தாசில்தார் ராசையா, சமூக
பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கிருஷ்ணவேணி விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:''இந்திரா காந்தி தேசிய மாற்று திறனாளிகள் ஓய்வூதிய
திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்காக அனைத்து மாற்று திறனாளிகளையும் மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்தி 30 சதவீதம் செயல் திறனற்ற மாற்று திறனாளிகளை
கண்டறியும் பொருட்டு சிறப்பு மருத்துவ முகாம் கடையநல்லூர் யூனியன்
அலுவலகத்தில் இன்று (7ம் தேதி) நடக்கிறது.காலை 10 மணி முதல் 1 மணி வரை
முகாம் நடக்கிறது.
முகாமில் கடையநல்லூர் யூனியனிற்கு உட்பட்ட மாற்று
திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்மருத்துவ முகாமிற்கு வரும்
மாற்று திறனாளிகள் தங்களது ரேஷன் கார்டு, மாற்று திறனாளிகளுக்கான அடையாள
அட்டையின் நகல் மற்றும் நகல்களை கொண்டு வரவேண்டும்'' என அவ்விருவரும்
அறிக்கையில் கூறியுள்ளனர்.


