ADDED : செப் 08, 2011 02:04 AM
வால்பாறை : வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என்று புதிய செயல் அலுவலர் ஆறுச்சாமி கூறினார்.
வால்பாறை நகராட்சி செயல்அலுவலராக பணிபுரிந்த ராஜ்குமார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி மாற்றப்பட்டார். இதனையடுத்து நகராட்சி பொறியாளராக இருந்த சுப்பிரமணியம், செயல்அலுவலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் தற்போது புதிய செயல் அலுவலராக ஆறுச்சாமி பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்னர் குனியமுத்தூர் நகராட்சியில் பணிபுரிந்து வந்தார்.செயல்அலுவலர் ஆறுச்சாமி கூறியதாவது: வால்பாறை டவுன் பகுதியில் சீரான முறையில் குடிநீர் கிடைக்கவும், சுகாதாரம் பாதிக்காத வண்ணம் மக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப் படும். சுற்றுலா ஸ்தலமான வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும் செயல்படுவேன் என்றார். புதிய செயல்அலுவலருக்கு பொறியாளர் சுப்பிரமணியம், தலைமை எழுத்தர் பூபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


