/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சைனிக் பள்ளி பொன்விழா மாணவர்கள் அசத்தல்சைனிக் பள்ளி பொன்விழா மாணவர்கள் அசத்தல்
சைனிக் பள்ளி பொன்விழா மாணவர்கள் அசத்தல்
சைனிக் பள்ளி பொன்விழா மாணவர்கள் அசத்தல்
சைனிக் பள்ளி பொன்விழா மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 08, 2011 10:07 PM
உடுமலை : உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 50வது ஆண்டு பொன்விழா
நிகழ்ச்சி நடந்தது.
சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் சந்திப் சக்கரவர்த்தி
வரவேற்றார். விழாவில், முன்னாள் மாணவரான கிழக்கு பிராந்திய ஏர் கமாண்டர்
விமானப்படை அதிகாரி மாதேஸ்வரன் கண்காட்சியை திறந்து வைத்தார்.
கண்காட்சியில், கப்பல்படை, விமானப்படையில் சேர்வது குறித்த தகவல்கள்,
கராத்தே, சிலம்பம், யோகா, தபால்தலை, நாணயம், தடகள விளையாட்டு, இயற்பியல்,
உயிரியல்,வேதியியல், இயற்கை குறித்த சுற்றுச்சூழல், சமையல், நாடகம், கலை,
இசை உள்ளிட்ட மாணவர்களது பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
முன்னாள் மாணவர் புதுடில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையர் ஆனந்த் மற்றும்
சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினர்.தேசிய பாதுகாப்பு
கழகத்திற்கு அதிக மாணவர்களை அனுப்பியதற்காக பல்லவர் இல்லத்துக்கும்,
கல்வியில் தேர்ச்சி அடிப்படையில், சோழர் இல்லத்துக்கும், சிறந்த கண்காட்சி
அரங்கு அமைத்தற்காக சுற்றுச்சூழல் அரங்கிற்கு 2வது முறையாகவும், தபால்தலை,
நாணய கண்காட்சி அரங்கிற்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி,
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், தலைமையாசிரியர்
விங்கமாண்டர் ரவிக்குமார், பள்ளிப்பதிவாளர் ஸ்குவார்டன் லீடர்கான்,
முதன்மை ஆசிரியர் சார்லஸ் யூஜின் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


