/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம்லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம்
லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம்
லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம்
லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம்
ADDED : செப் 08, 2011 11:52 PM
விழுப்புரம் : விதிமுறையை மீறிய லாரி டிரைவருக்கு கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது.
வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கடந்த 5ம் தேதி இரவு 11 மணிக்கு வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே அளவுக்கு அதிகமான லோடு ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் ஆலாங்குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவர் அபராநத்தம் என்பவரை கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட டிரைவருக்கு 8 ,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


