/உள்ளூர் செய்திகள்/சேலம்/இலவச பொருட்கள் வழங்கதொகுதி வாரியாக ஊராட்சிகள் தேர்வுஇலவச பொருட்கள் வழங்கதொகுதி வாரியாக ஊராட்சிகள் தேர்வு
இலவச பொருட்கள் வழங்கதொகுதி வாரியாக ஊராட்சிகள் தேர்வு
இலவச பொருட்கள் வழங்கதொகுதி வாரியாக ஊராட்சிகள் தேர்வு
இலவச பொருட்கள் வழங்கதொகுதி வாரியாக ஊராட்சிகள் தேர்வு
ADDED : செப் 09, 2011 01:05 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக, 1.15 ஆயிரம் பயனாளிகளுக்கு, தமிழக அரசின், இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் வழங்கப்பட உள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, குறைந்தபட்ச மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அ.தி.மு.க.,தேர்தல் வாக்குறுதியான, இலவச கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், மாணவர்களுக்கு லேப் டாப், தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் கால்நடை வழங்கும் திட்டத்தை, செப்டம்பர் 15ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். கிரைண்டர், மிக்ஸியை பொறுத்தவரை, முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும், 25 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக, கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், ஓரிரு நாளில், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், அந்தந்த தாசில்தார் கட்டுப்பாட்டில், பாதுகாப்புடன் வைக்கப்படும்.தாலுகா வாரியாக அல்லாமல், சட்டசபை தொகுதி வாரியாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் இத்திட்டத்தை முழுமையாக கொண்டு சேர்க்க, அரசு திட்டமிட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும், பொருட்களை விற்பனை செய்ய முயன்றால், சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாவட்ட வாரியாக, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், குறைந்தபட்ச மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும், அங்குள்ள பயனாளிகள் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரேஷனில், அரிசி வாங்கும் அனைத்து கார்டுதாரர்களுக்கும், முதல் கட்டமாக, ஒரு லட்சத்து 15 ஆயிரம் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் வழங்கப்படுகிறது. லேப் டாப்பை பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 15 ஆயிரம் மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், கால்நடை துறை சார்பில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, கணவனை இழந்த பெண்களுக்கு, ஆடு, மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் இலவச திட்டப் பொருட்கள் ஓரிரு நாளில், சேலத்துக்கு வர உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி நடக்கும் துவக்க விழாவையொட்டி, 1,000 பேர் கொண்ட ஊராட்சியில் மட்டும், பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆடையூர் ஊராட்சியில், 65 பேருக்கும், கோவிந்தபாடியில், 64 பேருக்கும் மூன்று வெள்ளாடு, ஒரு ஆண் ஆடு கொடுக்கப்படுகிறது. கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் உள்ளிட்டவை, 1.15 லட்சம் பேருக்கும், 15 ஆயிரம் மாணவர்களுக்கு லேப் டாப் முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படுகிறது. வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் ஆகியோர்தான், இத்திட்டத்துக்கு பொறுப்பு அதிகாரிகள்.இவ்வாறு அவர் கூறினார்.


