Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போலீஸாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

போலீஸாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

போலீஸாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

போலீஸாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

ADDED : செப் 10, 2011 03:43 AM


Google News

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, விநாயகர் சிலையை மீண்டும் பூஜைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்காத போலீஸாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.காவேரிப்பட்டணம் அடுத்த அகரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் சார்பில், பொது இடத்தில் கடந்த 1ம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வந்தனர்.

கடந்த 6ம் தேதி விநாயகர் சிலையை ஊர்வலமாக பொதுமக்கள் எடுத்து வந்தனர். அகரம் கூட்டு ரோட்டில் உள்ள மசூதியை தாண்டி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லக்கூடாது என, போலீஸார் கூறினர். இதனால், போலீஸாருக்கும் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் விநாயகர் சிலையை நடு ரோட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.அதன்பின், சிலையை எடுக்க எவரும் முன்வராததால், ஒரு மணி நேரம் கழித்து விநாயகர் சிலையை போலீஸாரே எடுத்துச் சென்று அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விசர்ஜனம் செய்தனர்.அகரத்தை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினர். ஆனால், அகரத்தில் மீண்டும் விநாயகர் சிலையை வைக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு பர்கூர் டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், தினகரன், காசிநாதன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அகரத்தில் பாதுகாப்பு மேற்கொண்டுள்ளனர்.

விநாயகர் சிலையை மீண்டும் பூஜைக்கு வைக்க அனுமதி மறுத்த போலீஸாரை கண்டித்து, நேற்று அகரத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அகரம் மற்றும் அகரம் கூட்டுரோடு பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அகரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால், அந்த பகுதியில் போலீஸார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us