/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் வழங்கல்வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் வழங்கல்
வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் வழங்கல்
வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் வழங்கல்
வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்ட விண்ணப்பம் வழங்கல்
திருநெல்வேலி : வேலைவாய்ப்பற்ற பழங்குடி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழங்குடியினர் (எஸ்.டி.,) பிரிவினர் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள பழங்குடியினர் 45 வயதிற்குமேல் இருக்க கூடாது. கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி.,மேல்நிலைக்கல்வி,டிகிரி தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கவேண்டும். தகுதியுடைய மனுதாரர்கள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உடனடியாக விண்ணப்பதினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருவாய் ஆய்வாளர் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் புதிதாக துவங்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் அக்கவுண்ட் புத்தகம், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் வரும் 23ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு லட்சுமி நாராயணன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


