UPDATED : செப் 15, 2011 12:46 PM
ADDED : செப் 15, 2011 12:41 PM
புதுடில்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள அமர்சிங்கி்ற்கு செப்டம்பர் 19-ம் தேதிவரை இடைக்கால ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன்சிங் அரசை காப்பாற்ற பா.ஜ. எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக , சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கு மிக்க முன்னாள் தலைவர் அமர்சிங் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கடந்த 6-ம் தேதி அமர்சிங் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இவர் மீதான ஜாமின் மனு இன்று டில்லி ஐகோர்டில் விசாரணைக்கு வந்தது.அமர்சிங்கிற்கு ரூ. 2லட்சம் உத்தரவாதம் தரப்பட்டதன் பேரில் செப்டம்பர் 19-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அமர்சிங் தற்போது டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமின் உத்தரவு பெற்ற பின் அமர்சிங்கின் பாஸ்போர்ட் கோர்டில் ஒப்படைக்கப்பட்டது.


