ADDED : செப் 15, 2011 11:51 PM
கோவில்பட்டி : கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
திருநெல்வேலி மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் மா ணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் காலிறுதிப் போட்டியில் நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தி லும், அரையிறுதிப் போட்டியில் சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் அணி யை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென் று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொட ர்ந்து இறுதிப் போட்டியில் சேரன்மாதேவி ஸ்கேட் பாலிடெக்னிக் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற அணியை கல்லூரி நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.


