Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சந்தைகளில் வெவ்வேறாக விலை நிர்ணயம்

சந்தைகளில் வெவ்வேறாக விலை நிர்ணயம்

சந்தைகளில் வெவ்வேறாக விலை நிர்ணயம்

சந்தைகளில் வெவ்வேறாக விலை நிர்ணயம்

ADDED : செப் 20, 2011 01:19 AM


Google News

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தைகளில் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படுவதால், விவசாயிகள் மஞ்சள் விற்பனை செய்வதில் பெரும் சிரமமடைகின்றனர்.

தமிழகத்திலேயே பிரதான மஞ்சள் சந்தைகளாக, ஈரோட்டில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி, தனியார் மஞ்சள் மார்க்கெட் என நான்கு மஞ்சள் சந்தைகள் செயல்படுகின்றன. மஞ்சள் விலை சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. வெவ்வேறு விலை மாற்றத்தால், விவசாயிகள் எந்த சந்தையில் விலை அதிகமாக போகிறது என அறிவதில் பெரும் சிரமமடைகின்றனர். நேற்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் விலை 4,069 முதல் 4,411 ரூபாய்க்கும், கிழங்கு 3,780 முதல் 4,189 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் விரலி 3,536ல் இருந்து அதிகபட்சம் 4,534 ரூபாய்க்கும், கிழங்கு 3,780ல் இருந்து 4,046 ரூபாய்க்கும் விற்றது. கோபி சொசைட்டியில் விரலி 3,109ல் இருந்து 4,472 ரூபாய்க்கும், கிழங்கு 2,579ல் இருந்து அதிகபட்சம் 4,320 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.



ஈரோட்டில் மஞ்சள் விவசாயி முருகன் கூறியதாவது: கோபி பகுதியில் இருந்து ஈரோடு மஞ்சள் சந்தைக்கு 20 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வந்தேன். சில நாட்களாக உற்பத்தி செலவுக்கு கூட கிடைக்காமல், மஞ்சள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எனினும், வரும் பண்டிகை காலங்களை யொட்டி, மஞ்சள் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் நடக்கும் நான்கு மஞ்சள் சந்தைகளில், ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படுகிறது. மஞ்சள் விலை சரியும் நிலையில், எந்த மார்க்கெட்டில் மஞ்சள் விலை அதிகமாக இருக்கிறதோ; அங்கு அதிகமாக மஞ்சளை விற்பனை செய்ய விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால், ஒரு சந்தையில் இருந்து, இன்னொரு சந்தைக்கு சரக்கை எடுத்து செல்ல முடிவதில்லை. விலை நிலவரத்தையும் உடனுக்குடன் அறிய முடியவில்லை. முதல்நாள் விற்ற விலை, மறுநாள் நிலையாக இருப்பதில்லை. தினசரி ஒரு விலை மாற்றம் ஏற்படுகிறது. விவசாயிகளை மஞ்சளை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us