அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 27, 2011 11:34 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் பார்த்திபன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூறியதாவது: சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்காக வணிகர்கள் பாதிக்கப்படுவதுடன் உள்நாட்டு அனைத்து வணிகமும் பாதிக்கப்படும். இதேபோல் உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் ஆகியவற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற விலைவாசியை உயர்த்தும் சரக்கு வரி மற்றும் சேவைவரி சட்டத்தை அமல்படுத்த கூடாது போன்ற மூன்று கோரிக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 11ம் தேதி மாநில முழுவதும் மாவட்ட தலைநகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். அரசு உத்தரவை மீறி அனைத்து டோல்கோட்டில் முறைகேடான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் கேட்டால் ரவுடிகளை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டி வருவதை அனைத்து வணிகர் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். டோல்கேட்டில் நடந்து வரும் முறைகேடான கட்டண வசூல் செய்யப்படுவதை தடுத்த நிறுத்தகோரி மாநில முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 'தர்மபுரி, மொரப்பூர் ரயில்வே இணைப்பு பட்ஜெட்டி அறிவிக்கப்பட்டும் இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டம் உடனடியாக நிறைவேறற வலியுறுத்துதல், தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மந்தநிலை பணிகள் காரணமாக அனைத்து ரோடுகளை சீரழிந்து உள்ளதை சீர்செய்ய வலியுறுத்துவது' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாநில பொதுசெயலாளர் மோகன், வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


