ADDED : செப் 16, 2011 01:28 AM
அவிநாசி:அவிநாசியில் நடந்த ஏலத்தில் பருத்தி ரகங்களின் விலை
அதிகரித்திருந்தது.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில் நடந்த இவ்வார பருத்தி ஏலத்துக்கு, 1,300 மூட்டை வரத்தாக
இருந்தது.
இது, கடந்த வாரத்தை விட, 1,800 மூட்டை குறைவு. வரத்து குறைவாக
இருப்பினும் கூட, அனைத்து ரகங்களுக்கு கடந்த வாரத்தை விட, குவிண்டாலுக்கு
ரூ.100 முதல் 400 வரை விலை அதிகரித்தது. இந்த வாரம் புதிய வரத்தாக சுரபி
வந்திருந்தது.பருத்தி ஏலத்தில் (குவிண்டாலுக்கு) விலை விவரம்:எல்.ஆர்.ஏ.,
ரூ.3,900 முதல் 4,400 வரை, ஆர்.சி.எச்., ரூ.4,300 முதல் 4,600 வரை, சுரபி
ரூ.4,400 முதல் 4,720 வரை, டி.சி.எச்., ரூ.4,500 முதல் 4,705 வரை மற்றும்
மட்டம் ரூ.1,900 முதல் 2,200 வரை.சங்க தனி அலுவலர் பழனிசாமி கூறுகையில்,
''ஏலத்துக்கு பருத்தி வரத்து குறைந்துள்ள நிலையிலும், அனைத்து
ரகங்களுக்கும் நல்ல விலை கிடைத்தது. தற்போது சீசன் குறைந்துள்ளதால், வரத்து
குறைவாக இருந்தது. அடுத்த மாத இறுதியில் மீண்டும் அதிகரிக்கும். இந்த
வாரம், ரூ.18.30 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது,'' என்றார்.


