/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி10ம் வகுப்பு பொதுத்தேர்வு :அரசு தேர்வுத்துறை அறிவிப்புசமச்சீர் கல்வித்திட்டத்தின்படி10ம் வகுப்பு பொதுத்தேர்வு :அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி10ம் வகுப்பு பொதுத்தேர்வு :அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி10ம் வகுப்பு பொதுத்தேர்வு :அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
சமச்சீர் கல்வித்திட்டத்தின்படி10ம் வகுப்பு பொதுத்தேர்வு :அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
ADDED : செப் 28, 2011 10:39 PM
கோவை : மாநிலத்தில் சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, வரும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறையை தொடர்ந்து, வரும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் பாடத்திட்டத்தின்படி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருந்த இடைநிலைக்கல்வி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., பாடத்திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு என ஒரே தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும்.வரும் 2012 மார்ச்-ஏப்., மாதங்களில் நடைபெறவுள்ள இடைநிலைக்கல்வி பொதுத்தேர்வு, சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின்படியே இருக்கும். பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடக்காது. முதன் முறையாக இத்தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின்படியே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.நடப்பாண்டு செப்., அக்., மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில்(பழைய பாடத்திட்டம்) இடைநிலை கல்வி பொதுத்தேர்வு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் இடைநிலைக் கல்வி பாடத்திட்டங்களின் படியே, மார்ச் 2012ல் நடைபெறும் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.புதிய பாடத்திட்டத்தின்படி, 10ம் வகுப்பில் செய்முறைத் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2012ம் ஆண்டு மார்ச், ஏப்., புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதவுள்ள நேரடி தனித்தேர்வர்களுக்கு, செய்முறைத்தேர்வு எங்கு, யாரால், எப்படி நடத்தப்படவுள்ளது என்பது குறித்து தக்க அறிவுரை விரைவில் தனியே வழங்கப்படும். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


