/உள்ளூர் செய்திகள்/தேனி/மாணவிகளுக்கு ஆலோசனை மையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் உறுதிமாணவிகளுக்கு ஆலோசனை மையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் உறுதி
மாணவிகளுக்கு ஆலோசனை மையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் உறுதி
மாணவிகளுக்கு ஆலோசனை மையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் உறுதி
மாணவிகளுக்கு ஆலோசனை மையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 10:45 PM
ஜி.கல்லுப்பட்டி : ''இளைஞர்களுக்கு சுயதொழில் ஆலோசனை மையம் அமைக்கப்படும்,'' என, ஜி.
கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் என்.கே.பி.வளையாபதி கூறினார்.அவர் கூறியது: அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாமதமின்றி வழங்கப்படும். சாக்கடை கழிவுகள், குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டு சுகாதாரம் காக்கப்படும். ஊரக வேலை உறுதி திட்டத்தில், சம்பளம் முறையாக வழங்கப்படும். வார்டுகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு, உடன் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தெருக்களிலும் கூடுதல் விளக்குகள் அமைக்கப்படும். மக்கள் எந்நேரமும் நேரடியாக சந்தித்து குறைகளை கூறலாம். முதியோர், திருமண உதவி, மருத்துவ காப்பீட்டு திட்டம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனது தந்தை நினைவாக மையம் அமைக்கப்பட்டு, மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசனை, விவசாய திட்டங்கள், இளைஞர்களுக்கு சுய தொழில் குறித்து ஆலோசனை வழங்கப்படும். பெண்கள் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படும். சிமென்ட், தார் ரோடுகள் தரமாக அமைக்கப்படும். சிறுவர் பூங்கா அமைக்கப்படும். புறக்காவல் நிலையம், பகுதி நேர கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மின் கட்டண வசூல் மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார்.


