Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அணுசக்தி திட்டம் கொரியாவுடன் இணைகிறது இந்தியா

அணுசக்தி திட்டம் கொரியாவுடன் இணைகிறது இந்தியா

அணுசக்தி திட்டம் கொரியாவுடன் இணைகிறது இந்தியா

அணுசக்தி திட்டம் கொரியாவுடன் இணைகிறது இந்தியா

UPDATED : ஜூலை 23, 2011 05:52 AMADDED : ஜூலை 23, 2011 05:11 AM


Google News
புதுடில்லி: அணுசக்தி திட்டங்களில் ஜப்பான் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென்கொரியா மற்றும் மங்கோலியா நாட்டுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரதுதென்கொரியா சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் லீமையூங்கை சந்தித்து அணுசக்தி திட்டம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.மேலும் இரு நாடுளின் இடையேயான வர்த்தகத்தை வரும் 2014-ம் ஆண்டிற்கும் 30 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன்சிங் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த ஆசியன் மாநாட்டில் தென்கொரிய அதிபரை சந்தித்து பேசினார். .அப்போது இரு நாடுகளிடையேயான அணுசக்தி திட்டத்தில் ஒத்துழைப்பது குறித்து பேசப்பட்டது. மேலும் 23 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் மங்கோலியா நாட்டிற்கு செல்லும் இந்திய ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் அந்நாட்டுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us