ADDED : ஜூலை 24, 2011 05:30 AM
தர்மபுரி : காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, காவிரியில் நீர் வரத்தும் வழக்கத்தை விட அதிகரித்தது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்தும் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் , கபினியில் இருந்து விநாடிக்கு, 20 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 5,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இதனால், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் துவங்கியது. ஒகேனக்கல் மெயின் அருவிக்குச் செல்லும் நடைபாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் பயணம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.