Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கல்

இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கல்

இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கல்

இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கல்

ADDED : ஜூலை 25, 2011 11:25 PM


Google News

விழுப்புரம் : பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளில் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்த புத்தாக்க அறிவியல் விருது, 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

2010 -2011ம் ஆண்டிற்கு மாநிலத்தில் 15 ஆயிரத்து 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 814 பள்ளிகளில் 1,125 மாணவ, மாணவிகளுக்கு தலா 5000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ.,வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் சீனிவாசன் திட்டம் குறித்து பேசினார். சி.இ.ஓ., குப்புசாமி, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் பூபதி, தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய விஞ்ஞானி டேவிட் பொன் னுதுரை பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us