Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் நீச்சல் போட்டி

குற்றாலத்தில் நீச்சல் போட்டி

குற்றாலத்தில் நீச்சல் போட்டி

குற்றாலத்தில் நீச்சல் போட்டி

ADDED : ஜூலை 26, 2011 01:34 AM


Google News

குற்றாலம் : குற்றாலம் சாரல் திருவிழாவின் 3வது நாளான நேற்று நீச்சல் போட்டி நடந்தது.குற்றாலம் நீச்சல் குளத்தில் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று நீச்சல் போட்டி நடந்தது.

நிகழ்ச்சிக்கு குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி ராசையா தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.இதில் 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான நீச்சல் போட்டியில் ஆதித்யா சீவானா முதலிடமும், ஹில்டன் பள்ளி மாணவி தங்கசிவகாமி இரண்டாமிடமும், மேகஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் தேவி முதலிடமும், செல்வரோஹினி இரண்டாமிடமும், பிரியதர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர்.



8 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ட்ரீனா ஐரீன் முதலிடமும், சாய்ஷ்ரேயா இரண்டாமிடமும், பிரிஷ்கா மூன்றாமிடமும் பெற்றனர்.13 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டியில் சுபாஷ் சங்கர் முதலிடமும், எபின்ஐவன் இரண்டாமிடமும், முத்துநாதன் மூன்றாமிடமும் பெற்றனர். 13 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் நிக்ஷன் முதலிடமும், நல்லவீரபாகு (எ) சிவா இரண்டாமிடமும், சுஜித்கிருஷ்ணா மூன்றாமிடமும் பெற்றனர். 8 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பெனடிக்டன் ரோஹித் முதலிடமும், ஆலன்ராய் இரண்டாமிடமும், அஜய் விஸ்வராஜ் மூன்றாமிடமும் பெற்றனர்.போட்டியின் நடுவர்களாக ராமேஸ்வரம் உதவி சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன், பிரேம்குமார் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரவில் நடந்த விழாவில் பரிசு வழங்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us