அரியானவில் தியாகிகள் பென்ஷன் ரூ.15 ஆயிரமாக உயர்வு
அரியானவில் தியாகிகள் பென்ஷன் ரூ.15 ஆயிரமாக உயர்வு
அரியானவில் தியாகிகள் பென்ஷன் ரூ.15 ஆயிரமாக உயர்வு
ADDED : ஆக 07, 2011 06:07 AM
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் , தியாகிகளுக்கான ஓய்வு ஊதியத்தினை ரூ.
4 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரத்திற்கு உயர்த்தி அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர்சிங் ஹூடா உள்ளார். இந்நிலையில் அரியானாவில் ஹிஸார் நகரில் சுதந்திர போராட்ட தியாகிகள் அமைப்பினர் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்து கொண்டு முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா பேசியதாவது, அரியானாவில் சாமன் அலவென்சஸ் எனும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்ஷனை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ. 4 ஆயிரம் பென்ஷன் வாங்குபவர்களுக்கு இந்தாண்டு ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலிருந்து அமலுக்கு வருகிறது. மேலும் தியாகிகளின் உடல்நலம் குறித்து மாதம் தோறும் பரிசோதனை செய்ய அவர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சையளிக்க அரசு டாக்டர்கள் நியமிக்கப்படவுளளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகம், சுகாதரா கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் கூறினார்.