/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம்நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசம்கரூர் பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம்நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசம்
கரூர் பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம்நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசம்
கரூர் பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம்நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசம்
கரூர் பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாணம்நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப்பரவசம்
ADDED : ஆக 12, 2011 11:09 PM
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சௌந்திரநாயகி உடனுறை
திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள்
திருக்கல்யாண உற்சவத்தை கண்டு களித்தனர்.கரூர் மகா அபிஷேக குழு சார்பில்
13 வது பசுபதீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கடந்த 4 ம் தேதி முகூர்த்த கால்
நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தாலி செய்ய
கொடுத்தல், திருக்கல்யாணத்துக்கு பட்டு எடுத்தல் மற்றும் முளைப்பாரி
போடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கரூர்
ஸ்ரீ பெருமாள் கோவிலில் இருந்து, சீர்தட்டுகள் ஊர்வலம் நடந்தது. 8 மணிக்கு
மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மாப்பிள்ளை பெண் வீடு புகுதல் உள்ளிட்ட சிறப்பு
உப சரணைகள் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்திகேயனின் வீணை இசை கச்சேரி
நடந்தது.நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு 108 சிறப்பு பால்
அபிஷேகத்துடன் திருகல்யாண உற்சவம் தொடங்கியது. 9 மணிக்கு ஆசிரியர் குமார
சாமிநாதனின் தேவார இசை நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு கல்யாண
பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சௌந்திர நாயகி உடனுறை திருக்கல்யாண உற்சவம்
வெகு சிறப்பாக நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
11
மணிக்கு திருச்சி தருமை ஆதினம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்,
சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார். மதியம் 12 மணிக்கு பார்கவியின் பக்தி
இன்னிசை கச்சேரி, 2 மணிக்கு விஜய் கார்த்திகேயனின் பரத நாட்டிய
நிகழ்ச்சிகள் நடந்தது.ஏற்பாடுகளை கரூர் மகா அபிஷேக குழு நிறுவன தலைவர்
பாலகிருஷ்ணன், கௌரவ தலைவர் சண்முகம், செயலாளர் தங்கவேல், பொருளாளர்
பாஸ்கரன், அமைப்பாளர் கார்த்திகேயன், துணை தலைவர்கள் ராஜேந்திரன்,
வெங்கடேஷன், துணை செ யலாளர்கள் கார்த்திக், மோகன், பிரதிநிதி மணிகண்டன்
உள்ளிட் ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


