வீட்டில் தெளித்த, பூச்சி மருந்து நெடியால் இரட்டை சகோதரிகள் பலியான சோகம்
வீட்டில் தெளித்த, பூச்சி மருந்து நெடியால் இரட்டை சகோதரிகள் பலியான சோகம்
வீட்டில் தெளித்த, பூச்சி மருந்து நெடியால் இரட்டை சகோதரிகள் பலியான சோகம்
ADDED : ஆக 30, 2011 12:35 AM
புனே : மகாராஷ்டிராவில், பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்திய இரட்டை சகோதரிகள் ஜன்னலை திறந்து வைக்காத காரணத்தால், மூச்சு திணறி பலியாயினர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர்கள் உஷா மற்றும் சந்தியா, 54. இரட்டை சகோதரிகளான இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நேற்று காலை இவர்கள் வீட்டுக்கு வந்த பால்காரர், பல முறை குரல் கொடுத்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து, பக்கத்து வீடுகளில் தகவல் தெரிவித்துள்ளார். அண்டை வீட்டார் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் வீட்டு கதவை உடைத்து, உள்ளே சென்ற போது பூச்சி மருந்து நெடி காணப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்று பார்த்த போது, சகோதரிகள் இருவரும் இறந்து கிடந்தனர். காலையில், பூச்சி கொல்லி மருந்தை அறை முழுவதும் தெளித்துவிட்டு வெளியே சென்று விட்டு, இரவில் வீடுதிரும்பிய இவர்கள் ஜன்னல் கதவை திறந்து வைக்காத காரணத்தால், பூச்சி மருந்தின் நெடியில் மூச்சு திணறி பலியாகியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.


