/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆவின் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசுக்கு கோரிக்கைஆவின் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசுக்கு கோரிக்கை
ஆவின் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசுக்கு கோரிக்கை
ஆவின் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசுக்கு கோரிக்கை
ஆவின் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசுக்கு கோரிக்கை
ADDED : செப் 04, 2011 09:36 PM
சென்னை : 'ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள அனைத்து தொழில் நுட்பப் பணியாளர்களின் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்' என்று, தமிழ்நாடு ஆவின் பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆவின் பொறியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில், மாநிலத் தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,'ஆவினில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு வழங்காமல் உள்ள இளநிலை மேலாளர் (பராமரிப்பு) 30 பேருக்கு, துணை மேலாளர் பதவி வழங்க வேண்டும். ஆவின் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆவின் நிறுவன மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்து பயணப்படி, அரசு அறிவித்தபடி, கடந்த அக்டோபர் 1ம் தேதியிலிருந்து 300 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி, நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும்' என்பது உட்பட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது.


