Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

உலகின் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார்

ADDED : செப் 07, 2011 01:30 AM


Google News
Latest Tamil News
உலகத்தில் மிகச்சிறிய எலக்ட்ரானிக் மோட்டார், ஒரே ஒரு மூலக்கூறை (மாலிக்கூல்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனைக்காக அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். இந்த மோட்டார் 200 நானோ மீட்டர் அளவுள்ளது. மனிதனின் ஒரு முடி 60 ஆயிரம் நானோ மீட்டர் அளவுடையது. ஆனால் இந்த மோட்டார் 200 நானோ மீட்டரே இருப்பதால் இதன் அமைப்பு மிக மெல்லியதாக இருக்கும். கண்ணுக்கு தெரியாத இதை 'மைக்ரோஸ்கோப்' வைத்துத்தான் பார்க்க முடியும்.

மருத்துவம் முதல் பொறியியல் வரை நானோ தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் விதமாக இந்த மோட்டார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை செப்.4ல் 'நேச்சுர் நோனோடெக்னாலஜி' என்ற தலைப்பில் 'ஆன்லைனில்' வெளியிடப்பட்டது.

டப்ட்ஸ் பல்கலை பேராசிரியர்களான இ.சார்லஸ், எச்.சைக்ஸ் ஆகியோர் கொண்ட குழு இதை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மூலக்கூறு உருவாக்கத்தில், ஒளியும், வேதிவினையும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மோட்டார், மூலக்கூறு மின் உந்துசக்தி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டாரை இயக்க 'லோ டெம்பரேச்சர் ஸ்கேனிங் டியுனலிங் மைக்ரோஸ்கோப்' (எல்.டி.,-எஸ்.டி.எம்.,) பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவில் நூறு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த மைக்ரோஸ்கோப்பின் முனையில் உலோகம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோஸ்கோப் சார்ஜ் ஆக பயன்படுகிறது. மோட்டாரின் காப்பர் பகுதியில் மெத்தில் சல்பைடு மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறது. இந்த சல்பைடு பெற்றுள்ள மூலக்கூறுகளான கார்பன் மற்றும் ஹைட்ரஜன், இரண்டு கைகளை போல செயல்படுகின்றன. மொத்தம் நான்கு கார்பன், ஹைட்ரஜன்கள் சுற்றிலும் இருக்கின்றன. மோட்டார் இயங்கும் போது சல்பர் - காப்பர் பகுதியை சுற்றிலும் இவை அனைத்தும் தொடர்ச்சியாக செயல்படுகின்றன. இதனால் மூலக்கூறில் ஏற்படும் வெப்பத்தை, அதன் சுழற்ச்சியை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.

மோட்டாரை இயக்கும் போது வெப்பம் மட்டும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவத்துறையில் உள்ள சிறு பொருட்களில் இதன் பயன்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. முடியை விட சிறிதாக உள்ள குழாய்களில் கூட இதை பொருத்த முடியும். இதைக்கொண்டு மினியேச்சர் கியர் பொருட்களை தயாரிக்கலாம். இந்த ஒற்றை மூலக்கூறு எலக்ட்ரானிக் மோட்டாரின் பயன்பாடு வரும் காலங்களில் நோனோ அறிவியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us