/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிளை வாய்க்காலை தூர் வாரணும்பிள்ளப்பாளையம் மக்கள் கோரிக்கைகிளை வாய்க்காலை தூர் வாரணும்பிள்ளப்பாளையம் மக்கள் கோரிக்கை
கிளை வாய்க்காலை தூர் வாரணும்பிள்ளப்பாளையம் மக்கள் கோரிக்கை
கிளை வாய்க்காலை தூர் வாரணும்பிள்ளப்பாளையம் மக்கள் கோரிக்கை
கிளை வாய்க்காலை தூர் வாரணும்பிள்ளப்பாளையம் மக்கள் கோரிக்கை
ADDED : செப் 08, 2011 01:22 AM
லாலாப்பேட்டை: பிள்ளப்பாளையம் பஞ்சாயத்து கிளை பிள்ளப்பாளையம் பாசன
வாய்க்கால் முழுவதும் தண்ணீர் செல்ல வசதி இல்லாமல் முட்புதர்கள் மண்டி
கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.லாலாப்பேட்டை கிளை பிள்ளப்பாளையம் வாய்க்கால்
மூலம் லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, பிள்ளப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள
2,000 க்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஆடிப்பட்டத்தில் தண்ணீரை எதிர்பார்த்து வாழை மற்றும் வெற்றிலை
கொடிகள் பயிரிடப்பட்டுள்ளது. ஆ னால் கிளை வாய்க்காலில் தூ ர் வாராமல் நீண்ட
நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் புதிய கட்டளை வாய்க்கால்
தண்ணீர் முறையாக பிள்ளப்பாளையம் கிளை வாய்க்காலில் வருவது கிடையாது.
வாய்க்கால் தண்ணீரை நம்பி பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் வெற்றி கொடிகள்
கருகும் நிலையில் உள்ளது.தொடர்ந்து வரும் சாக்கடை கழிவு நீரால், வாய்க்கால்
முழுவதும் புதர்கள் மண்டியுள்ளது. விவசாயங்களுக்கு போதுமான தண்ணீர்
செல்வதில் தேக்கம் ஏற்பட்டு விவசாய நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர்
இல்லாமல் பொதுவான விவசாய பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.எனவே,
பொதுப்பணித்துறை கிளை பாசன பிள்ளப்பாளையம் வாய்க்கால் பராமரிப்பு மற்றும்
புதர்கள் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த பகுதியை
சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


