ADDED : செப் 08, 2011 02:28 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 8 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாரராக பணியாற்றிய
சித்ரா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக
பாதுகாப்பு திட்ட தாசில்தார் சந்திரசேகரன், ஏற்கனவே பதவி வகித்த சிரஸ்தாரர்
இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, சேலம் முத்திரை கட்டண
தாசில்தார் சுரேஷ், கனிமவள தாசில்தாராகவும், அங்கு, தாசில்தாராக பணியாற்றிய
ராஜன், இடைப்பாடி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூர்
தாசில்தாராக பணியாற்றிய அசோகன், சேலம் மாநகராட்சி தேர்தல் பிரிவு
தாசில்தாராகவும், ஆத்தூர் வனத்துறை நிலஎடுப்பு தாசில்தார் கிருஷ்ணப்பா,
சேலம் முத்திரை கட்டண தாசில்தாராகவும், கெங்கவல்லி தாசில்தாராக பணியாற்றிய
பாப்பாத்தி, ஓமலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு
பணியாற்றிய தேவிகாராணி, சேலம் சந்தியூர் டாஸ்மாக் குடோன் உதவி மேலாளராகவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, கலெக்டர் மகரபூஷணம்
வெளியிட்டுள்ளார்.


