Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுமுகையில் ரூ.4.50 கோடியில் புதிய பாலம்

சிறுமுகையில் ரூ.4.50 கோடியில் புதிய பாலம்

சிறுமுகையில் ரூ.4.50 கோடியில் புதிய பாலம்

சிறுமுகையில் ரூ.4.50 கோடியில் புதிய பாலம்

ADDED : செப் 08, 2011 10:22 PM


Google News
மேட்டுப்பாளையம் : சிறுமுகையில் பவானி ஆற்றின் குறுக்கே 4.50 கோடி ரூபாயில் இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.

சிறுமுகை-கிச்சகத்தியூர் இடையே பவானி ஆற்றின் குறுக்கே 1981ம் ஆண்டு 3 மீட்டர் அகலமுள்ள, உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர், ஆளூர், லிங்காபுரம், வச்சினம்பாளையம், மணிஸ்காலனி, இலுப்பபாளையம், திம்மராயம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, இந்திராநகர், கே.ஜி.சி. நகர், அம்பேத்கார் நகர், கோவிந்தனூர் ஆகிய கிராம மக்கள் இப்பாலத்தின் வழியாக சிறுமுகை மற்றும் வெளியூருக்கு சென்று வருகின்றனர். பாலம் அமைப்பதற்கு முன்பு பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து வந்தனர். மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகமாக வந்ததால், பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் மையப்பகுதியில் பாலத்தை தாங்கியுள்ள தூண் சிறிது கீழே இறங்கி விட்டது. இது குறித்து,ரவிச்சந்திரன் கூறிய தாவது:சிறுமுகை பவானி ஆற்றின் மேற்கு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளன. அறுவடையின் போது தினமும் பாலத்தின் வழியாக 50க்கும் மேற்பட்ட லாரிகள், வாழைக்காய் லோடு வந்து செல்லும். லிங்காபுரம், வச்சினம்பாளையம், மூலத்துறை ஆகிய ஊர்களுக்கு 30க்கும் மேற்பட்ட முறை, அரசு டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேற்கு பகுதி கிராமங்களையும், சிறுமுகையையும் இணைப்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள பாலமாகும். இரண்டு பெரிய குடிநீர் குழாய்களும் இதன் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. தமிழக அரசு புதிய பாலம் அமைக்க 4.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர் 120 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில், ஆற்றின் குறுக்கே 5 தூண்கள் கொண்ட உயர் மட்ட பாலம் கட்ட அளவு எடுத்து வருகின்றனர். இதனால் சுற்றியுள்ள 16க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us