Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மனைவியுடன் மாஜி முதல்வர் குமாரசாமி லோக் ஆயுக்தா கோர்ட்டில் ஆஜரானார்

மனைவியுடன் மாஜி முதல்வர் குமாரசாமி லோக் ஆயுக்தா கோர்ட்டில் ஆஜரானார்

மனைவியுடன் மாஜி முதல்வர் குமாரசாமி லோக் ஆயுக்தா கோர்ட்டில் ஆஜரானார்

மனைவியுடன் மாஜி முதல்வர் குமாரசாமி லோக் ஆயுக்தா கோர்ட்டில் ஆஜரானார்

ADDED : செப் 09, 2011 11:16 PM


Google News
Latest Tamil News

பெங்களூரு : லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில், நேரில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க, கடந்த பத்து நாட்களாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது மனைவி அனிதா ஆகியோர், நேற்று லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஜந்தக்கல் சுரங்க நிறுவனத்துக்கு முறைகேடாக அனுமதி அளித்தது தொடர்பாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி மீதும், விஸ்வபாரதி சொசைட்டிக்கு நிலம் வழங்கியதற்காக, அவரது மனைவி அனிதா மீதும் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வினோத் குமார் புகார் செய்தார்.



இந்த வழக்கில், முன்ஜாமின் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நீண்ட இழுபறிக்கு பின், ஐகோர்ட் முன்ஜாமின் அளித்தது. இதனால், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்த குமாரசாமி தம்பதியர், நேற்று காலை லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, மேலும் ஒரு ஜாமின் மனுவை தாக்கல் செய்தனர். கர்நாடக ஐகோர்ட் அளித்துள்ள நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் மனுவின்படி, 50 ஆயிரம் ரூபாய் பாண்டு மற்றும் ஒரு நபர் ஜாமின் அளித்து, ஜாமினுக்கு ஒப்புதல் அளித்தனர்.



நேற்று காலை 10.30 மணிக்கு பாதுகாப்புடன், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மனைவியுடன் வந்த குமாரசாமி, காலை 10.50க்கு மூன்றாவது மாடியிலுள்ள சிறப்பு நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். காலை 11 மணிக்கு நீதிபதி சுரேந்திரராவ், விசாரணையை துவக்கினார். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் அகமது பாஷா, ஐகோர்ட் அளித்த முன்ஜாமின் மனு குறித்த நகலை தாக்கல் செய்தார். அப்போது, கைது செய்யப்படவில்லை. கைது செய்வதற்கான உத்தரவும் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு எதற்கு ஜாமின் வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினாவிசாரணை முடிந்த பின், முன்ஜாமின் பிரதியை பரிசீலித்து, ஐகோர்ட் நிபந்தனைபடி, தனி நபர் பாண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரியின் ஒப்புதலுக்கு ஏற்ப, தனி நபர் ஜாமினும் அளிக்குமாறு உத்தரவிட்டார்.



இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஜந்தக்கல் சுரங்க நிறுவன இயக்குனர் வினோத் கோயலும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஷ்யாமி ஸ்டெபாஸ்டின் மனு ஒன்றை தாக்கல் செய்தார். உடல் நலக்குறைவால், கோயல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும், என்று கூறியிருந்தார். வினோத் கோயல் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர முதுகு வலியும் உள்ளது. இது குறித்து டாக்டர்கள் அளித்துள்ள சான்றிதழையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தனது கட்சிக்காரருக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுதீந்திரராவ், எத்தனை நாட்கள் ஓய்வு வேண்டும் என்று கேட்ட போது, ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும், என்று வழக்கறிஞர் கூறினார். விசாரணையின் முடிவில், வேறு எந்த காரணத்தையும் கூறாமல், மூன்று பேரும் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us