Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

ADDED : செப் 16, 2011 12:00 AM


Google News

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு நெல் கொள்முதல் மையத்தில், தொடர்ந்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ராமகவுண்டர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்த, இங்கு நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், இதுவரை, 25 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து, 20 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது . பல விவசாயிகளிடம் நெல் இருப்பு உள்ளது. வரும் 30ம் தேதி வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் தேதியை நீட்டிக்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகமும் அரசும் கால்வேஅள்ளி மற்றும் கிருஷ்ணகிரியில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us