Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/65 தனித்தனி வண்ணங்களுடன் கூடிய "ஜடாவு பட்டு' ஆரெம்கேவி அறிமுகம்

65 தனித்தனி வண்ணங்களுடன் கூடிய "ஜடாவு பட்டு' ஆரெம்கேவி அறிமுகம்

65 தனித்தனி வண்ணங்களுடன் கூடிய "ஜடாவு பட்டு' ஆரெம்கேவி அறிமுகம்

65 தனித்தனி வண்ணங்களுடன் கூடிய "ஜடாவு பட்டு' ஆரெம்கேவி அறிமுகம்

ADDED : செப் 16, 2011 02:01 AM


Google News

திருநெல்வேலி : உலகிலேயே முதன்முதலில் 65 தனித்தனி வண்ணங்களுடன் கூடிய 'இன்லே' என்ற புது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரெம்கேவி நிறுவனம் 'ஜடாவு பட்டு ' அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரெம்கேவி கடந்த 87 ஆண்டுகளாக பட்டு உற்பத்தியில் தன்னிகரற்று விளங்கி வருகிறது. அதன் படைப்புகள் மூலம் பல சாதனைகளை செய்து வருகிறது. இதுபோன்ற சாதனை படைப்புகளை உருவாக்குவதற்கென பிரத்யேகமாக ஆரெம்கேவி தனது டிசைன் ஸ்டுடியோவை அமைத்துள்ளது. அதன் கலைஞர்கள் பட்டின் பல பரிணாமங்களை அடையாளப்படுத்தி கடந்த காலங்களில் பல தேசிய மற்றும் கின்னஸ் விருதுகளை பெற்றுள்ளது. ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோவின் கை வண்ணத்தில் உருவான தேசிய விருது பெற்ற ஹம்ச தமயந்தி மற்றும் ஐஸ்வர்யப் பூக்கள், கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற உலகின் நீளமான பட்டுப்புடவை, 50 ஆயிரம் வண்ண பட்டுப்புடவை, நகாசு பட்டு போன்ற முத்திரை பதித்த அற்புதப் படைப்புகள் உலகையே பிரமிக்க வைத்தது. மேலும் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இயற்கை சாயமேற்றுதல் முறையில் நவீனமாக உருவாக்கப்பட்ட நேச்சுரல்ஸ், மூன்றாண்டு ஆராய்ச்சியின் பயனாக உருவான இறகு போன்ற மெல்லிய லினோ லைட் பட்டுப்புடவைகள் என புதுமை படைப்புகளில் ஆரெம்கேவியின் சாதனை பட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 'ஜடாவு பட்டு' என்ற புதிய பட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இழைக்கு இழை வண்ணமும், கலைநயமும் கொண்ட இந்த ஜடாவு பட்டில் 'இன்லே' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஸ்தபதிகளும், பொன் நகை கலைஞர்களும் பயன்படுத்தி வந்த நுட்பத்தை உலகிலேயே முதன் முதலில் பட்டுச் சேலையில் 65 தனித்தனி வண்ணங்களுடன் ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ கலைஞர்கள் இடம் பெறச் செய்துள்ளனர். ஆரெம்கோவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்கள் புதிய சாதனை படைப்புகளை, தங்களின் கலைத்திறமையோடு வடிவமைத்து வருகின்றனர். இந்த வரிசையில் 'ஜடாவு பட்டு' வரும் தலைமுறைக்கு வரலாற்று சான்றாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us