தனித்து போட்டி: ஜெயந்தி நடராஜன் மழுப்பல்
தனித்து போட்டி: ஜெயந்தி நடராஜன் மழுப்பல்
தனித்து போட்டி: ஜெயந்தி நடராஜன் மழுப்பல்
UPDATED : செப் 18, 2011 12:33 AM
ADDED : செப் 17, 2011 10:49 PM

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து கேட்டதற்கு, 'நோ கமென்ட்ஸ்' என, மத்திய இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பதிலளித்தார்.
நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை வந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
'கூடங்குளத்தில் அணு மின் உலை செயல்படுவது குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனரே?' எனக் கேட்டதற்கு, 'அது என் துறையின் கீழ் வராது. அணுசக்தி துறை சம்பந்தப்பட்டது' என்றார். அடுத்ததாக, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது குறித்து கேட்டபோது, 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறி, நகர துவங்கினார். பத்திரிகையாளர்கள் விடாமல், 'பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது குறித்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளனவே?' எனக் கேட்டனர். இதற்கு பதிலளிக்காமல், 'எனக்கு வழி விடுகின்றீர்களா?' எனக் கேட்டுவிட்டு, வேகமாக கிளம்பிச் சென்று விட்டார்.