தமிழக காவல் துறை வாத்திய இசைக்குழு போட்டி : சாம்பியனானது ஆயுதப்படை மண்டலம்
தமிழக காவல் துறை வாத்திய இசைக்குழு போட்டி : சாம்பியனானது ஆயுதப்படை மண்டலம்
தமிழக காவல் துறை வாத்திய இசைக்குழு போட்டி : சாம்பியனானது ஆயுதப்படை மண்டலம்
சென்னை : தமிழக காவல் துறையின் மண்டலங்களுக்கு இடையே நடந்த வாத்திய இசைக்குழு போட்டியின் நிறைவு விழா நேற்று நடந்தது.
வாத்திய இசைக்குழு போட்டியில், முதல் பரிசை வடக்கு மண்டலமும், இரண்டாம் பரிசை ஆயுதப்படை மண்டலமும் வென்றது. கூட்டுக்குழல் ஊதும் போட்டியில், முதல் பரிசை ஆயுதப்படை மண்டலமும், இரண்டாம் பரிசை மேற்கு மண்டலமும் வென்றது. ஒட்டு மொத்த சாம்பியனாக ஆயுதப் படை மண்டலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விழாவில், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் பேசியதாவது: தமிழக அளவில் வாத்திய இசைக்குழுவினர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்திய அளவில் இந்த பயிற்சி போதாது. 800 நபர்கள் இதற்கென தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்ததில், 300 பேர் மட்டுமே நிறைவான அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு இந்திய அளவில் தமிழக காவல் துறை வாத்திய இசைக்குழுவினர் சாதிக்க வேண்டும். இவ்வாறு டி.ஜி.பி., பேசினார்.
விழாவில், கூடுதல் டி.ஜி.பி., நரேந்திரபால் சிங், ஐ.ஜி., பிரமோத் குமார், முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் சேகர், முத்துகருப்பன், அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் நடந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களின் சாகச நிகழ்ச்சியும், வாத்திய இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.