/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பூ விலை உயர்வு: செவ்வந்தி கிலோ ரூ.300பூ விலை உயர்வு: செவ்வந்தி கிலோ ரூ.300
பூ விலை உயர்வு: செவ்வந்தி கிலோ ரூ.300
பூ விலை உயர்வு: செவ்வந்தி கிலோ ரூ.300
பூ விலை உயர்வு: செவ்வந்தி கிலோ ரூ.300
ADDED : அக் 05, 2011 02:11 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில், ஆயுதபூஜையையொட்டி பூ விலை
உயர்ந்திருந்தது.
செவ்வந்தி, கிலோ 300 ரூபாய் வரை ஏலம் போனது. பொள்ளாச்சி
பூ மார்க்கெட்டிற்கு, ராயகோட்டை, ஒசூர் பகுதிகளிலிருந்து செவ்வந்தி
பூக்களும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளான குரும்பபாளையம்,
குள்ளக்காபாளையம், அம்பராம்பாளையம், வடுகபாளையம், சூளேஸ்வரன்பட்டி
பகுதிகளிலிருந்து செண்டுமல்லி, அரளி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களும்
வரத்தாக உள்ளது. மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் மதுரை, நிலக்கோட்டை
பகுதியிலிருந்து வரத்துள்ளது. போதிய மழை பொழிவு இல்லாமல், வெயில்
சுட்டெரிப்பதால், கடந்த 4 மாதங்களாக பூ வரத்து சரிந்துள்ளது. இந்நிலையில்,
இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ளதால் பொள்ளாச்சி சந்தைக்கு வழக்கத்தை விட
நேற்று வரத்து அதிகரித்திருந்தது. செவ்வந்தி பூ மட்டும் 20 டன் வரை வரத்தாக
இருந்தது. மற்ற பூக்கள் 10 டன் வரத்தாக இருந்தது. வரத்து
அதிகரித்திருப்பினும் பூவுக்கு கிராக்கி இருந்ததால், தமிழக, கேரள
வியாபாரிகள் போட்டி, போட்டு கொண்டு பூக்களை ஏலம் எடுத்தனர். இதில்,
செவ்வந்தி பூ (மஞ்சள்) கிலோ 200 முதல் 300 ரூபாய் வரையும், மல்லிகை கிலோ
350 ரூபாய் வரையும் ஏலம் போனது. சந்தைக்கு, பூ கொண்டு வரப்பட்டு ஒரு மணி
நேரத்தில் அனைத்தும் விற்றுதீர்ந்தது. கேரளாவுக்கு 10 டன் பூக்கள்
அனுப்பப்பட்டது. நேற்றைய பூ மார்க்கெட் விலை நிலவரம் (கிலோவுக்கு): மல்லிகை
- 350, முல்லை - 300, கோழிக்கொண்டை - 80, செவ்வந்தி (மஞ்சள்) - 200,
செண்டுமல்லி - 60, அரளி - 300, செண்டுமல்லி - 150, வாடாமல்லி - 90,
செவ்வந்தி (வெள்ளை) - 220, கலர் கிஷான் (செவ்வந்தி ஹைபீரிட்) - 240 என விலை
போனது.


