Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

ADDED : அக் 05, 2011 10:37 PM


Google News
ஊட்டி : ஊட்டி காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு; கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்து பேசுகையில்,''தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.

ஊழலையும், லஞ்சத்தையும் களைந்து, மக்களை அலைகழிப்பதை தவிர்த்து நலத்திட்டங்கள் மக்களிடம் முறையாக செல்ல வழிவகை செய்கிறது. 10 ரூபாய் பணமாகவோ, நீதிமன்ற வில்லையாகவோ செலுத்தி கேள்விகளை கேட்கலாம்,'' என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''போலி விளம்பரம், இலவசங்கள், பரிசு சசீட்டுகள் மூலம் நுகர்வோரை மயக்கி அவர்களை அடிமையாக்கி விடுகின்றனர்,'' என்றார்.

கிராம தலைவர் கருணாகரன் தலைமையில் இந்திராநகர், பரமூலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் நுகர்வோர் விழிப்புணர்வு பிரசாரங்களை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மேற்கொண்டனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவபுத்ரா முன்னிலை வகித்தார். மாணவன் பாலசுப்ரமணி வரவேற்றார். மாணவன் விஜயராஜ் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us