/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ. 5 கோடி :காங்., வேட்பாளர் கார்த்திகாபாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ. 5 கோடி :காங்., வேட்பாளர் கார்த்திகா
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ. 5 கோடி :காங்., வேட்பாளர் கார்த்திகா
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ. 5 கோடி :காங்., வேட்பாளர் கார்த்திகா
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ. 5 கோடி :காங்., வேட்பாளர் கார்த்திகா
ADDED : அக் 05, 2011 11:44 PM
விருதுநகர் : ''எனது முயற்சியால், அரசு மற்றும் உலக வங்கி உதவியுடன், 5
கோடி நிதி பெற்று ,பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
அமைத்துள்ளதாக,'' நகராட்சி தலைவர் வேட்பாளர் கார்த்திகா தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சியில் காங்., சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும்
கார்த்திகா பொதுமக்களிடம் ஓட்டுகள் சேகரித்தபோது கூறியதாவது: விருதுநகரில்
பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, உலக வங்கி நிதி உதவியுடன்,
தமிழக அரசு 23 கோடி ஒதுக்கியது. இதில் 2 கோடி ரூபாயை மாத்தநாயக்கன்பட்டி
பாதையில் உள்ள இடத்தில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
அமைக்க ஒதுக்கப்பட்டது. இது 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலான பழங்கால
திட்டத்தில் இப்பணி தொடங்க நேரிட்டது. இதனால் சுற்றுச்சூழல்
பாதிக்கப்படும் என கருதிய நான், நவீன சுத்திகரிப்பு நிலையமாக மாற்ற
வேண்டும் என நினைத்தேன். அதற்காக அரசு உதவியுடன், உலக வங்கியிடம் 5 கோடி
நிதி பெற்றேன். தற்போது பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. நவீன
சுத்திகரிப்பு நிலையம் செயல்பட துவங்கியதும், கவுசிகா ஆற்றிற்கு செல்லும்
கழிவு நீர் தடைபடும், ஆறும் தூய்மை அடையும். நகராட்சிக்கு சொந்தமாக
மாத்தநாயக்கன்பட்டியில் 100 ஏக்கர் இடம் உள்ளது. இதில் 'விவசாய புல்பண்ணை'
அமைத்து சீமைப்புல் வளர்க்க ஏற்பாடு செய்வேன். இதன் மூலம் கிடைக்கும்
வருவாயில் நகராட்சி நிதி பற்றாக்குறையை சீர்படுத்துவேன், என்றார்.


