/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/விஜயகாந்த் வருகையின் போது அரியலூரில் பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்குவிஜயகாந்த் வருகையின் போது அரியலூரில் பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
விஜயகாந்த் வருகையின் போது அரியலூரில் பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
விஜயகாந்த் வருகையின் போது அரியலூரில் பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
விஜயகாந்த் வருகையின் போது அரியலூரில் பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
ADDED : அக் 07, 2011 02:12 AM
அரியலூர்: உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக விஜயகாந்த் வருகையின்
போது, பட்டாசு வெடித்த தே.மு.தி.க.,வினர் மீது, அரியலூர் போலீஸார் வழக்கு
பதிந்துள்ளனர்.
தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தல்
பிரச்சாரத்துக்காக கடந்த மாதம் 29ம் தேதி இரவு 9.20 மணியளவில் அரியலூர்
வந்தார். அரியலூர் பஸ்ஸ்டாண்டு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டத்தில்
விஜயகாந்த், திறந்த ஜீப்பில் நின்றபடியே பேசினார். தே.மு.தி.க., சார்பில்
அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் லெட்சுமி
மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க., மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இதையடுத்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வருகையின் போது, பெயர், முகவரி
தெரியாத தே.மு.தி.க.,வினர், உரிய அனுமதி பெறாமல், மனித உயிருக்கு ஆபத்து
ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக, அரியலூர் தெற்கு வி.ஏ.ஓ.,
பிச்சைபிள்ளை கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.


