கோ-ஆப் டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
கோ-ஆப் டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
கோ-ஆப் டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
ADDED : அக் 07, 2011 09:55 PM

சென்னை : கோ-ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, சென்னை மாவட்ட கலெக்டர் அண்ணாமலை, நேற்று துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப் டெக்சில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை, சிறப்புத் தள்ளுபடி விற்பனை, நேற்று முதல் துவங்கியது. இதில், கைத்தறித் துணிகள், விசைத் தறித் துணிகள் அனைத்திற்கும், 30 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
விற்பனையைத் துவக்கி வைத்து, கலெக்டர் அண்ணாமலை கூறும் போது, ''கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்குத் துணி ரகங்கள் விலை குறைந்த விலையில் கிடைக்கின்றன. பார்த்தவுடன் கவரும் வகையில், துணிகளின் வடிவமைப்பு உள்ளது. இந்த தீபாவளியில், துணிகள் விற்பனை மேலும் அதிகரிக்கும்'' என்றார்.


