Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பயிற்சி முகாம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பயிற்சி முகாம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பயிற்சி முகாம்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பயிற்சி முகாம்

ADDED : அக் 11, 2011 01:51 AM


Google News
கரூர்: உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி முகாம் கரூர் ஐயப்பன் சேவா சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது.தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் புதியதாக இடம் பெற்றுள்ளது. வரும் 17 ம் தேதி நøபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக கரூர் நகராட்சியில் 159 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 318 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகிறது. ஒரு ஓட்டுச்சாவடியில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் துணை தேர்தல் அலுவலர்கள் என ஐந்து பேர் பணிபுரிய உள்ளனர். 159 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 795 தேர்தல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, 'மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான கடமைகள் குறித்து முகாமில் கரூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் நகரமைப்பு அலுவலர் கோபால கிருஷ்ணன், ஆய்வாளர் ஜானகி ராமன், சர்வேயர் பெரியசாமி பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us