Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மொபைல் போனில் ஆபாசமாகப் பேசி "டார்ச்சர்' கொடுத்த வாலிபர் கைது

மொபைல் போனில் ஆபாசமாகப் பேசி "டார்ச்சர்' கொடுத்த வாலிபர் கைது

மொபைல் போனில் ஆபாசமாகப் பேசி "டார்ச்சர்' கொடுத்த வாலிபர் கைது

மொபைல் போனில் ஆபாசமாகப் பேசி "டார்ச்சர்' கொடுத்த வாலிபர் கைது

ADDED : அக் 12, 2011 02:42 AM


Google News
காஞ்சிபுரம் : இளம்பெண்களிடம் மொபைல் போனில், ஆபாசமாகப் பேசிய வாலிபரைப் போலீசார் கைது செய்தனர்.மதுராந்தகம் அடுத்த, மலைவையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்.

இவரது மகள் கவிதா, 23. இவர் மறைமலைநகரில் மகளிர் விடுதியில் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள, தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மொபைல் போனில், வாலிபர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு, ஆபாசமாகப் பேசி தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து கவிதா, சென்னை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின்பேரில், மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். கவிதாவின் மொபைல் எண்ணில் பதிவாகியிருந்த எண்ணைக் கொண்டு விசாரித்தனர். விசாரணையில், செங்கல்பட்டு அண்ணாசாலையை சேர்ந்த இருதயராஜ் மகன் அந்தோணி பெனடிக்ட்ராஜ், 21, மொபைல் போனில் பேசியது தெரிந்தது.நேற்றுமுன்தினம் போலீசார் அந்தோணி யை கைது செய்து விசாரித்தனர். பட்டதாரியான அந்தோணி, மறைமலைநகரில் உள்ள, தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. நான்கைந்து மொபைல் போன் சிம்கார்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு எண்ணுக்கு போன் செய்வது, எதிர்முனையில் பெண்கள் பேசினால், அவர்களிடம் அன்பாகப் பேசுவது, அவர்கள் தொடர்ந்து பேசினால், ஆபாசமாகப் பேசுவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசில் புகார் செய்ய தயங்கியதால், அந்தோணி பயமின்றி தன் செயலை தொடர்ந்துள்ளார். போலீசார் அவரிடமிருந்த நான்கு மொபைல் போன் சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்தனர். அவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us